சண்டிகர்:கடந்த 2015ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் பாதல், முதலமைச்சராக இருந்தபோது குரு கிரந்த் சாகிப் என்னும் சீக்கிய மதகுருவை அவமதித்ததாகக் கூறி பஞ்சாப் ஃபரீத்கோட் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது, கோட்காபூரா, பெஹ்பல் கலான் ஆகிய இடங்களில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சுட்டில் இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தியோல் மீதான குற்றச்சாட்டு
பஞ்சாப் அரசின் தலைமை வழக்கறிஞராக ஏபிஎஸ் தியோல் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.
2015 கோட்காபூரா தூப்பாக்கிச்சூடு வழக்கில், குற்றஞ்சாட்டுக்கு உள்ளான முன்னாள் காவல் துறை இயக்குநர் சுமேத் சிங் சைனி சார்பில் தியோல் வாதாடியுள்ளார் எனவும்; அவரை அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கக் கூடாது எனவும் சித்து கூறியிருந்தார்.