டெல்லி : பஞ்சாப் சட்டப்பேரவை 2022இல் ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் ஜன.18ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பஞ்சாப் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி உறுதியாக உள்ளது. தொடர்ந்து மாநிலத்திலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் குறித்த நாளை வெளியாகிறது. இந்தப் பட்டியலில் பகவந் சிங் மான் முதலிடத்தில் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ஆதாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும்.