சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டம் ஜலாலாபாத் கிராமத்தில் நேற்று (ஜூலை 2) திருமண விழா நடந்துகொண்டிருந்தது. இந்த விழாவில் சமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதனால் அருகிலிருந்த 4 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
திருமண விழாவில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு - திருமண விழாவில் சிலிண்டர் வெடிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் திருமண விழாவின்போது சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த மூன்று பேரும் தீவிர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட தகவலில், உயிரிழந்திருப்பது மூன்று பெண்கள், ஒரு சிறுமி என்பதும், இந்த விபத்து சிலிண்டர் ரெகுலேட்டரில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை மடக்கி பிடித்த கிராம மக்கள்