புனே: டெல்லியைச் சேர்ந்த 13, 16 மற்றும் 17 வயது சிறுமிகள், பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்சினையில், கோபித்துக் கொண்டு கடந்த 23ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வேலை தேடி புனே சென்ற அவர்கள், இரவு நேரத்தில் தங்குவதற்காக அங்குள்ள விடுதிக்கு சென்றுள்ளனர்.
மூவரும் சிறுமிகள் என்பதாலும், உடன் பெற்றோர் இல்லாததாலும் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில், சிறுமிகள் பெற்றோரிடம் சண்டையிட்டு, ரயில் ஏறி புனே வந்தது தெரியவந்தது.