மும்பை:நாடு முழுவதும் முதல்கட்டமாக வரும் 16ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள் உள்ளிட்ட 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து முதல்கட்டமாக விமானம் மூலம் டெல்லிக்கு கரோனா தடுப்பு மருந்து அனுப்பிவைக்கப்பட்டது.
478 தடுப்பூசி பெட்டிகளுடன் இந்த விமானம் இன்று காலை 10.30 மணி அளவில் டெல்லி வந்தடைந்தது. இதிலுள்ள ஒவ்வொரு பெட்டியும் 32 கிலோ கொண்டதாகும். அதேநேரம் புனேவிலிருந்து டெல்லி மட்டுமல்லாது, சென்னை, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, கவுகாத்தி, லக்னோ, சண்டிகர், புவனேஸ்வர் உள்ளிட்ட 12 நகரங்களுக்கும் தடுப்பு மருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:தடுப்பூசிப் போடும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்; தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பு!