மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த வர்த்தகர் வினய் நாயக். இவர் கிரிப்டோகரன்சியில் சுமார் ரூ.300 கோடி முதலீடு செய்துள்ளார் என்பதை சைபர் கிரைம் செல்லில் பணிபுரியும் அப்பகுதியைச் சேர்ந்த காவலர் திலீப் துகாராம் என்பவர் அறிந்துகொண்டார்.
இதையடுத்து, வினய் நாயக்கை ஆள்கள் வைத்து கடத்தி, அவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார் திலீப். தொடர்ந்து, ஜனவரி மாதம் 14ஆம் தேதி வினயை ஆள் வைத்து கடத்திய காவலர் ஹோட்டல் ஒன்றில் அடைத்து வைத்துள்ளார்.
வினய் கடத்தப்பட்டது தொடர்பாக அவர் நண்பர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், கைதுக்கு பயந்து கடத்தல் கும்பல் வினாய்யை விடுத்துள்ளனர். இருப்பினும் இவர்களின் கடத்தல் நாடகத்தை கண்டறிந்து இந்த செயலில் ஈடுபட்ட காவலர் திலீப் உள்ளிட்ட எட்டு பேரை புனே காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த குற்றச்செயலின் பின்னணியில் முக்கிய குற்றவாளியாக காவலர் திலீப் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க:2021இல் சென்னையில் மட்டும் 161 கொலைகள்! - போலீஸ் ரிப்போர்ட்