தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு- வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி டிஜிபியிடம் மனு! - புதுச்சேரியில் கொடூரம்

வேலை தேடி வந்த இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைவருக்கு(டிஜிபி) மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : Jul 29, 2021, 8:16 PM IST

புதுச்சேரி:இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (31). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு

வேலை தேடி வந்துள்ளார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. தங்கவும் இடமில்லை.

இதனிடையே கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு மேட்டுப்பாளையம் 4 முனை சாலை சந்திப்பு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஓரமாக சதீஷ்குமார் தூங்கச் சென்றுள்ளார்.

அப்போது, சதீஷ்குமாரைப் பார்த்த பெட்ரோல் பங்க் உரிமையாளரும், பாஜக வணிகப் பிரிவு மாநில அமைப்பாளருமான ராஜமவுரியா உள்ளிட்ட 7 பேர் யார், எந்த ஊர் என்று கேட்டுள்ளனர்.

அவரது தோற்றத்தைக் கண்டு கொள்ளையடிக்க அல்லது பில்லி சூனியம் வைக்க வந்திருப்பாரோ? என்று சந்தேகமடைந்து தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து, பெட்ரோல் பங்க்கில் இருந்து பெட்ரோல் பிடித்துவந்து சதீஷ்குமார் மீது ஊற்றித் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சதீஷ்குமார் 60 விழுக்காடு தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ராஜமவுரியா, அவரது தம்பி ராஜவரதன், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிவசங்கர், குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவானவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 29) தீக்காயம் அடைந்த சதீஷ்குமாரின் தம்பி ராஜ்குமார், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளுடன் காவல்துறை தலைவர் ரன்வீர்சிங் கிருஷ்ணியாவைச் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் தடயங்கள் தெரியக்கூடாது என்பதற்காக சிசிடிவியில் பதிவான காட்சிகளை அழித்துள்ளதுடன், பல்வேறு தடயங்களையும் அழித்துள்ளனர்.

எனவே தடயங்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். அவைகள் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதோடு, அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பெண்கள் விடுதி கட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details