நடப்பு ஆண்டிற்கான புலிட்சர் விருது, காஷ்மீர் பெண் புகைப்படக் கலைஞரான சன்னா இர்ஷாத் மட்டூவிற்கு (28) அறிவிக்கப்பட்டது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கரோனா தொற்றை பற்றிய செய்திக்காக இவ்விருது சன்னாவுக்கு அறிவிக்கப்பட்டது.
நியூயார்க்கில் நடைபெறும் விருது விழாவில், புலிட்சர் விருதினை பெறுவதற்காக சன்னா நேற்று டெல்லி விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு அவரை பயணம் செய்யவிடாமல் விமான நிலைய குடியேற்ற அலுவலர்கள் தடுத்துள்ளனர்.
இதுகுறித்து சன்னா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உரிய அமெரிக்க விசா மற்றும் டிக்கெட்டை வைத்திருந்த நிலையில், டெல்லி விமான நிலைய குடியேற்றத்தில் நிறுத்தப்பட்டேன். இதனால் நியூயார்க்கில் புலிட்சர் விருதை பெறப் போகும் எனது சர்வதேச அளவிலான பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக எனது வெளிநாடு பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து குடியேற்ற அலுவலர்களை அணுகிய போதிலும், சரியான பதில் கிடைக்கவில்லை. புலிட்சர் விருது விழாவில் பங்கேற்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைத்த வாய்ப்பு” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:புலிட்சர் விருது வென்ற காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண்!