தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி சட்டப்பேரவை ஆகஸ்ட் 26-இல் கூடுகிறது - சட்டப்பேரவை செயலர் முனுசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை ஆகஸ்ட் 26 இல் கூடுகிறது
புதுச்சேரி சட்டப்பேரவை ஆகஸ்ட் 26 இல் கூடுகிறது

By

Published : Aug 19, 2021, 5:09 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர், இரு வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்றனர். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோரை சந்தித்தனர்.

அப்போது புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும் , பட்ஜெட்டிற்கு ஒப்புதல் தரவேண்டும், புதிய சட்டப்பேரவை கட்டடத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை ஆகஸ்ட் 26-இல் கூடுகிறது
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்குவதாக சட்டப்பேரவை செயலர் முனுசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 15வது புதுச்சேரி சட்டப்பேரவை 2021 ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9-30மணிக்கு கூடுவதாகவும், அன்று துணைநிலை ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நாடாளுமன்ற நிலைக்குழு ஜம்மு காஷ்மீர் பயணம்

ABOUT THE AUTHOR

...view details