புதுச்சேரி: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழகம் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை மூடப்படும். விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்கள் வரும் 25ஆம் தேதிக்கு முன்பே விடுதிகளை காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடுதிகளை மீண்டும் திறப்பது குறித்து இணையதளத்தில் பின்பு அறிவிக்கப்படும். பல்கலைக்கழகத்தில் இருந்து தங்களக்குத் தேவையான பொருட்களான மடிக்கணினி, அசல் சான்றிதழ் உள்ளிட்டவை அனைத்தையும் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதுச்சேரி பல்கலைக்கழகம் இன்று முதல் 5 நாட்களுக்கு மூடல்!
புதுச்சேரி பல்கலைக்கழகம் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
puducherry-university-closes-for-5-days-from-tomorrow
ஏப்ரல் 26ஆம் தேதி முதல் பல்கலைக்கழகம் விடுதி உணவகம் மூடப்படும். எனவே அதற்கு அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை மாணவர்கள் விடுதிகளில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் இறப்பு!