புதுச்சேரி:கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 50 பேருக்கும், காரைக்காலில் 19 பேருக்கும், மாஹேவில் 09 பேருக்கும் என மொத்தம் 78 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கரோனா பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1838ஆக உள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 901 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.