புதுச்சேரி: உலக தாய்மொழி தினத்தையொட்டி புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சித் தொடர்பான பல்வேறு பணிகளை உடனே தொடங்க வேண்டும் எனக் கூறியும், தமிழர்கள் இந்நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடாத சூழல் நிலவுவதை கண்டித்தும் புதுச்சேரி மாநில தமிழ்ப்பற்றாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆளுநர் மாளிகை அருகே தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி தமிழ் பற்றாளர் கூட்டமைப்பு போராட்டம் - உலக தாய்மொழி தினம்
உலக தாய்மொழி தினத்தையொட்டி புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சித் தொடர்பான பல்வேறு பணிகளை உடனே தொடங்க வேண்டும் எனக் கூறி புதுச்சேரி மாநில தமிழ்பற்றாளர் கூட்டமைப்பினர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
புதுச்சேரியில் தமிழ்வளர்ச்சித் துறையை உடனே அமைக்க வேண்டும், தமிழ்மாமணி, கலைமாமணி உள்பட அனைத்து தமிழ் விருதுகளையும் முறைப்படி வழங்க வேண்டும், படைப்பாளர் ஊக்குவிக்கும் திட்டங்களை உடனே அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அறிவுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவர்கள் தபால் அனுப்பி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திமுக உறுப்பினரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது