தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எங்களது கட்சியினரை மிரட்டி ஆட்சி கலைத்துள்ளனர்:புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு! - புதுச்சேரி காங்கிரஸ்

புதுச்சேரி: பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வரும் முன்பு காங்கிரஸ் ஆட்சி இருக்கக்கூடாது என்று எங்களது கட்சியினரை மிரட்டி ஆட்சி கலைத்துள்ளனர் என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Puducherry State Congress Party Leader AV Subramanian
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன்

By

Published : Feb 23, 2021, 7:08 AM IST

புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏவி சுப்ரமணியன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், "பாஜக புதுச்சேரியில் அடுத்த ஒரு ஜனநாயக படுகொலை செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியை அதன் காலம் முடியும் முன்பே கலைத்துள்ளது, பிரதமர் மோடி பிப்ரவரி 25ஆம் தேதி புதுச்சேரிக்கு வருவதற்கு முன் காங்கிரஸ் ஆட்சி இருக்கக்கூடாது என ஒட்டுமொத்த மத்திய அரசு இறங்கி காங்கிரஸ் எம்எல்ஏக்களை மிரட்டி பதவி, ஆசை காட்டியும், பணம் கொடுத்தும் சிலரை தங்கள் பக்கம் இழுத்துள்ளனர்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன்

இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, வெளியேறியவர்கள் வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இல்லாதவர்கள் எங்களுக்கும் அவர்கள் வெளியேறியதால் எந்தவித பாதிப்பும் இல்லை.

இதனால் வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட அவர்கள் வெளியேறியதால் இது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும், வரும் தேர்தலில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பாஜக ஜனநாயக முறையில் வெற்றிபெற முடியாது எனவே இந்த தந்திரத்தில் புதுச்சேரியில் ஆட்சி கலைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில், புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராகவும், முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கொடுத்துவிட்டதால், அவரை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து நீக்குகிறோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் ஜனநாயகப்படுகொலை :முக ஸ்டாலின் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details