புதுச்சேரி:ஒன்றிய அரசின் உத்தரவுப்படி, கரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் நேற்று முனம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சபாநாயகர் செல்வம், அப்பகுதி எம்எல்ஏ கலந்துகொண்டு மக்களுக்கு அரிசி வழங்குவதாக இருந்தது. ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே ரேஷன் கடை ஊழியர் மக்களுக்கு இலவச அரிசியை வழங்கியதாக கூறப்படுகிறது.