புதுச்சேரி உழவர்கரை பாவணன் நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் கிஷ்வந்த் (10). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 14) காலை பன்னீர்செல்வம் தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
பவழம்சாவடி அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனம் வந்ததை பார்த்த அவர் வாகனத்தின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி தனது மகனுடன் கீழே விழுந்தார்.
தந்தை கண்முன்னே மகன் விபத்தில் உயிரிழப்பு விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து பின் சக்கரம் பன்னீர்செல்வத்தின் மகன் மீது ஏறி இறங்கியது. இதில் கிஷ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்தான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கோவையில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!