புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று (ஜன. 31) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திங்கள் முதல் சனி வரை
தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால், வரும் பிப். 4ஆம் தேதியில் இருந்து 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற உள்ளன.
மேலும், பள்ளி, கல்லூரிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முழுநாள் செயல்படும். மாணவ மாணவியர்கள் தொடர்ந்து கல்வி பெறுவதற்கு ஏதுவாக இத்தகைய முடிவு, முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக, அதிமுக, பாஜக அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியீடு