புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் மைக்கேல் பெனோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு தேர்வுத் துறை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, மே 5ஆம் தேதிமுதல் 31ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு கல்வி வாரியத்தின்கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாள்கள் குறித்த அறிவிப்பு, தமிழ்நாடு கல்வி வாரிய இயக்குநரால் தேர்வு நடைபெறும் 15 நாள்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும். பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்த வடிவம் அல்லது முறையிலும் வகுப்புகளை நடத்தக் கூடாது.