புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கவிருக்கிறது. அங்கு, திமுக-காங்கிரஸ் கூட்டணியும், என்.ஆர். காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணியும் களத்தில் இருக்கின்றன.
புதுச்சேரி தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு அனுப்பிவைப்பு - விவிபேட்
புதுச்சேரி: நாளை நடக்கவிருக்கும் வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
dsa
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை புதுச்சேரியில் நடக்கவிருக்கும் சூழலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன. இச்சூழலில், அங்கிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களும், விவிபேட்களும் அனுப்பிவைக்கப்பட இருக்கின்றன. முன்னதாக தேர்தலையொட்டி புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.