தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் சுற்றுலாப்பயணிகள் போல் நடித்து கஞ்சா விற்பனை: ஆறு பேர் அதிரடி கைது! - பாகூர் போலீசார்

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளைப்போல் நடித்து, கஞ்சா விற்பனை செய்த ஆறு பேரை கைது செய்த புதுச்சேரி போலீசார் ரூபாய் ஆறு லட்சம் மதிப்புள்ள ஆறு கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 9, 2022, 9:20 PM IST

புதுச்சேரி: பாகூர் போலீசார் எல்லைப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, கண்ணியக்கோயில் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர் கஞ்சா விற்பதாகத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியிலிருந்த கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த சூர்யா, வசந்த், ஜெர்விஸ் ஆகியோரைக் கைது செய்து விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில்இவர்களின் நண்பர் சென்னையைச்சேர்ந்த பிரதாப்மோகன் என்பவர், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள்போல் நடித்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்களது கூட்டாளிகள் மூலமாக கஞ்சா கொடுப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நெய்வேலியைச்சேர்ந்த பிரதாப்மோகன், கோபால் (எ) கோபாலகிருஷ்ணன் மற்றும் சந்துரு ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆறு கிலோ ஐந்நூறு கிராம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் ஆறு லட்சம் ஆகும்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணியின் 11 ஆம் சுற்று முழு விவரம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details