தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி இரட்டைக் கொலை - தீவிர சோதனை - இரட்டைக் கொலை

புதுச்சேரியில் இரட்டைக் கொலை நடைபெற்ற பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

v
v

By

Published : Oct 30, 2021, 7:12 PM IST

புதுச்சேரி வானரப் பேட்டை பகுதியில் அக்டோபர் 23ஆம் தேதி பாம் ரவி, அவரது கூட்டாளி நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி காவல்துறையினர் இதுவரை 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழுக்கும் மேற்பட்டோரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நகரப் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காவல்துறை இயக்குநர் தலைமையில், காவல்துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், குற்ற சம்பவங்கள் கடுமையாக நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இரட்டைக் கொலை நடைபெற்ற பகுதிகளில் உள்ள ரவுடிகள், சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள நபர்களின் வீடுகளில் மோப்பநாய் கொண்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இரட்டைக் கொலை காரணமாக எதிர் கோஷ்டியினர் ஏதாவது அசம்பாவித செயலில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கொலைசெய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்திற்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்

ABOUT THE AUTHOR

...view details