தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குற்றவாளிகளுடன் போலீஸ் தொடர்பு வைத்திருந்தால்... அவ்வளவுதான் - நமச்சிவாயம் - namasivayam

புதுச்சேரியில் குற்றச்செயலில் ஈடுபடுவோர்களுடன் காவல்துறையினர் தொடர்பு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அலுவலர்கள் கூட்டத்திற்கு பின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
puducherry

By

Published : Jul 16, 2021, 9:12 AM IST

புதுச்சேரி:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூலை 15) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்னியா, ஏடிஜிபி ஆனந்த மோகன், முதுநிலை காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், "புதுச்சேரியில் உள்துறைக்கு என தனி அமைச்சர் நியமனம் செய்யப்பட்ட பிறகு, காவல்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அமைதியான புதுச்சேரியை நோக்கி...

இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும், காவல்துறையை நவீனப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், காவல்துறையினரின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசித்தோம்.

அமைதியான புதுச்சேரியை நிலைநிறுத்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை தீவிரமாக கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூட்டத்தில் அறிவுறுத்தினேன்.

போதை பொருள் தடுக்கப்படும்

சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு- புதுச்சேரி மாநில காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினேன்.

போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணித்து தடை செய்ய போதை பொருள் தடுப்பு பிரிவு ஒன்று அமைக்கப்படும். மேலும் காவல்துறையில் காலியாக உள்ள காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களை நிரப்ப தேவையான தேர்வுகளை நடத்தி அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடன் காவல்துறையினர் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்... டெல்லி புறப்பாடு ஏன்?

ABOUT THE AUTHOR

...view details