புதுச்சேரி:புதுச்சேரியில் அதிகரித்து வரும் வாகன திருட்டை தடுக்க, காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த உருளையன்பேட்டை காவல் நிலைய சரக போலீசார், கடந்த 2ஆம் தேதி பண்ருட்டியைச் சேர்ந்த வல்லரசு, சுபாஷ் ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
வல்லரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கரி சஞ்சய் என்பவரை, போலீசார் கடந்த 19ஆம் தேதி கைது செய்து, மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.