தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் இழுபறி: மவுனம் காக்கும் முதலமைச்சர்

புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்று நான்கு நாள்களாகியும், இதுவரை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யாமல் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி மவுனம் காத்துவருகிறார்.

மௌனம் சாதிக்கும் முதலமைச்சர்
மௌனம் சாதிக்கும் முதலமைச்சர்

By

Published : Jun 30, 2021, 11:33 AM IST

Updated : Jun 30, 2021, 1:15 PM IST

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசின் அமைச்சரவை விரிவாக்கம் கடந்த 27ஆம் தேதி நடந்தது.

அமைச்சரவைப் பதவியேற்பு விழா

புதுச்சேரியில் பாஜக சார்பில் இரண்டு பேரும், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மூன்று பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். என்.ஆர். காங்கிரஸ் சார்பில் தேனீ ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்காவும் - பாஜக சார்பில் நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

பதவி இருக்கு... பலனில்லை

புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வருவதைத் தவிர அவர்களுக்கென்று எவ்வித பணிகள் இல்லை. இதனால் மக்களிடமிருந்து பெறும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மவுனம் காக்கும் முதலமைச்சர்

இதனிடையே, என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதலமைச்சர் என்பதால் தங்களுக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று பாஜக சார்பில்அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு முதலமைச்சர் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் தனக்கு உள் துறை, பொதுப்பணித் துறை, கலால் ஆகிய துறைகளை ஒதுக்கும்படி நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது. ஆதிதிராவிடர் துறைக்கு என்.ஆர். காங்கிரசின் சந்திர பிரியங்கா, பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார் ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி அமைத்திருக்கும் நிலையைக் கருத்தில்கொண்டுமுதலமைச்சர் ரங்கசாமி சாதுரியமாகக் காய்களை நகர்த்திவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் காலதாமதம் ஆவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:புதுச்சேரி அமைச்சரவை: பெருமையும் வேதனையும்!

Last Updated : Jun 30, 2021, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details