புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், நேற்று (மே.18) ஒரே நாளில் 9,559 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புதுச்சேரியில் 1,380, காரைக்காலில் 244, ஏனாமில் 123, மாஹேவில் 53, என மொத்தம் 1,797 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாநிலத்தில் 17,477 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 69,060 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,670 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 29 நபர்களும், காரைகாலில் ஒன்று, மாஹேவில் இரண்டு, ஏனாமில் ஒன்று என மொத்தம் 33 பேர் கரோனா தாெற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,212 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 87,749 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 333 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!