தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிவரை பொதுமுடக்கம் நீட்டிப்பு! - puducherry curfew

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஆகஸ்ட் 15 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

puducherry lockdown extend
puducherry lockdown extend

By

Published : Jul 31, 2021, 10:40 PM IST

புதுச்சேரி : கூடுதல் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஆகஸ்ட் 15 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ”கரோனா தொற்று பரவல் காரணமாக, இன்று (ஜூலை 31) நள்ளிரவு தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருந்தது.

இந்நிலையில் தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதோடு, மேலும் ஆகஸ்டு 15ஆம் தேதி நள்ளிரவுவரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. இதன்படி, நாள்தோறும் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவுநேர பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.

அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. அனைத்து அரசுத் துறை, தனியார் துறை அலுவலகங்கள் இயங்கலாம். அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும்.

காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படும். அனைத்துவித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 9 மணிவரை 50 விழுக்காடு பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும்.

சில்லறை மதுக்கடைகள், சாராயம், கள்ளுக்கடைகள் காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை வழக்கம்போல் இயங்கலாம். பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுமக்களுக்கு அனுமதி.

அனைத்து வழிபாட்டுதலங்களிலும் இரவு 9 மணிவரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும். மல்டிபிளக்ஸ், திரையரங்குகள் 50 விழுக்காடு இயங்க அனுமதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.10,100 கோடி பட்ஜெட் கோப்பு ஒன்றிய அரசுக்கு அனுப்பல் - புதுச்சேரி அரசு

ABOUT THE AUTHOR

...view details