புதுச்சேரி:கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (ஜூலை 10) நடைபெற்றது. இந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து மருத்துவர்கள், அரசு மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் ஆகியோருக்குச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியின்போது பீச் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், 'மலிவு விலை உணவு' திட்டத்துக்காக 25 ஆயிரம் கையுறைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வெ. வெங்கடசுப்பு ரெட்டியார் அறக்கட்டளை மூலமாக ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மருத்துவர்களுக்கு சவால் ஏற்படுத்திய கரோனா
நிகழ்ச்சியில் பேசும்போது தமிழிசை, "கரோனா காலத்தில் பணியாற்றுவது மருத்துவர்களுக்குச் சவால் நிறைந்ததாக இருந்தது. அந்தச் சூழ்நிலையில் மருத்துவர்கள் சிறப்பாகப் பணியாற்றி, தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பேருதவி புரிந்தார்கள்.
இந்தக் காரணத்துக்காகவே உலக மருத்துவர்கள் நாளை நான் புதுச்சேரியில் கொண்டாடினேன். மருத்துவர்களின் நலம் குறித்து அடிக்கடி அலுவலர்களிடம் விசாரித்து அறிந்தேன்.
பொதுமக்கள் நலன்கருதி தளர்வுகளுடன் ஊரடங்கு