உலக மகளிர் நாள் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் (மார்ச் 8) சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மகளிர் நாள் விழா புதுச்சேரியில் அரசு சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி திடலில் நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருது வழங்கிய தமிழிசை! - Pudhucherry beach road
புதுச்சேரி: மகளிர் நாளான இன்று (மார்ச் 8) புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை விருது வழங்கி பாராட்டினார்.
மகளிர் தின விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், "அனைத்து குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
பெண்கள் சாதிக்கத் துடிக்க வேண்டும். பிரச்சினை வரும் நேரத்தில் என்னை உங்கள் சகோதரியாகப் பாவித்து தயங்காமல் உதவியை நாடலாம்" என்றார்.
இதையும் படிங்க: பெண்மையை போற்றுவோம்! உலக மகளிர் தின வாழ்த்துகள்