புதுச்சேரி: கி. ராஜநாராயணனுக்கு தமிழ்நாடு அரசு மரியாதை செய்வது தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அஞ்சலி செலுத்திய தமிழிசை சௌந்தரராஜன் அப்போது அவர் கூறுகையில், லாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லம் நினைவு நூலகமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும். புதுச்சேரியில் அவரது உடலை அடக்கம் செய்தால் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யும் எண்ணத்தில்தான் வந்தேன். தமிழ்நாட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய இருப்பது மரியாதைக்குரியது. புதுச்சேரி அரசின் மரியாதையுடன், தமிழ்நாடு அரசும் மரியாதை செய்வது தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை என்றார்.
இதையும் படிங்க: குஜராத்தைப் புரட்டிப் போட்ட 'டவ்-தே' புயல்... நள்ளிரவில் கரையை கடந்தது!