கடந்த மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கரோனா தொற்று, தற்போது நிலவும்இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இச்சூழலில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, புதுச்சேரி மாநில ஹோட்டல் அதிபர்கள், ஹோட்டல்களில் பணிபுரியும் அனைத்துப் பிரிவு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் ஒன்று கதிர்காமம் அரசு மருத்துவமனையில் நேற்று (ஏப்.09) தொடங்கியது.
கரோனா தடுப்பூசி போட்டா ஹோட்டலில் 10% டிஸ்கவுண்ட் இந்நிலையில், ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில ஹோட்டல் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கொண்டு வருபவர்களுக்கு ஹோட்டலில் தங்குவது, உணவுக்கான செலவு ஆகியவற்றிலிருந்து 10 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்குவது அல்லது அவர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கி ஊக்குவிப்பது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாத் தெரிவித்துள்ளனர்.
மேலும், கரோனா தடுப்பூசி சான்றிதழ் காட்டினால் அவர்கள் உண்ணும் உணவுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதுச்சேரியும் அனைத்து ஹோட்டல்களிலும் இந்த அறிவிப்பு அமலுக்கு வர உள்ளது.
இதையும் படிங்க:’பேரணிகளால் அதிகரிக்கிறதா கரோனா?’ குற்றம் சாட்டும் சிவசேனா, மறுப்பு தெரிவிக்கும் பாஜக