தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுவையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் கொடுக்க அனுமதி

புதுச்சேரி: கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து கொடுப்பதற்கு சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

By

Published : May 16, 2021, 8:02 PM IST

Updated : May 16, 2021, 9:37 PM IST

புதுச்சேரி
புதுச்சேரி

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “கோவிட் நோய் தடுப்புக்கு என்று புதுச்சேரி சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த கரோனா நோயை எதிர்ப்பதற்கு தேவையான மருந்துகள், தடுப்பூசி, மனித வளம், பரிசோதனை மையங்கள் என அனைத்தையும் சுகாதாரத் துறை தனிக் குழு கொண்டு செயல்படுத்தி வருகிறது.

தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை, கரோனா நோயாளிகளுக்கு என்ன மருந்து எப்போது கொடுக்க வேண்டும் என்று கையேடு ஒன்றைக் கொடுத்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல் இந்திய அரசாங்கம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கணக்கீடு செய்து ஒதுக்கியுள்ளது.

அந்த வகையில், புதுவையில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவையான அளவில் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்று (மே.16) முதல், கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க முன் வந்துள்ள புதுவையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், ரெம்டெசிவிர் மருந்து கொடுப்பதற்கு சுகாதாரத் துறை முன் வந்துள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து பெறுவதற்கான வழிமுறை

கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சேவை பார்க்கும் மருத்துவமனைகள் கீழ்கண்ட அரசாங்க அலுவலர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

1. மருத்துவர் வெங்கடேஸ்வர பாபு, igmc
+919786300717

2. மருத்துவர் ரவீந்திர பட், igmc.
+919894120573

இவர்களிடம் ஒப்புதல் பெற்று, பின் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்தினை பெற்றுக் கொள்ளலாம். இந்த மருத்துவர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகுதான் இந்த மருந்து கொடுக்கப்படும். மக்கள் யாரும் தவறான கருத்தை பகிர வேண்டாம் என்று சுகாதாரத் துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தனது தொகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துமாறு உதயநிதி வேண்டுகோள்!

Last Updated : May 16, 2021, 9:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details