தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’நல்லாசிரியர் விருது’ பெறும் புதுச்சேரி அரசுப்பள்ளி ஆசிரியர்! - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

புதுச்சேரி மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு 2021ஆம் ஆண்டின், தேசிய நல்லாசிரியர் விருதினை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/19-August-2021/12813738_pud1.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/19-August-2021/12813738_pud1.jpg

By

Published : Aug 19, 2021, 6:54 AM IST

புதுச்சேரி: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ’நல்லாசிரியர் விருது’ வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, அந்தந்த மாவட்டங்களில் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக குடியரசுத் தலைவர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆசிரியர் ஜெயசுந்தர்

விருதுக்கு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தேர்வு

அந்த வகையில் இந்த ஆண்டு மத்தியக் கல்வி அமைச்சகம், ’தேசிய நல்லாசிரியர் விருது’ பெறும் 44 ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் புதுவை மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயசுந்தரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், விருது பெற்ற ஆசிரியருக்கு சக ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அன்று கலைஞர் தொலைக்காட்சி, இன்று ஸ்டாலின் பேருந்து: சட்டப்பேரவையை அசரவைத்த உதயநிதியின் கன்னிப்பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details