தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை: பல்வேறு தரப்பினர் இரங்கல்! - Former legislator committed suicide

புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். குடுப்ப பிரச்னை காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் தற்கொலை
புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் தற்கொலை

By

Published : Feb 22, 2023, 7:36 AM IST

புதுவை: புதுச்சேரி மாநில அதிமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாக இருந்தவர் நடராஜன்.
எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்த 1972-ல் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டு கழகப் பணி ஆற்றியவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பல ஆண்டுகள் அதிமுக மாநிலச் செயலாளராகவும், கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்தவர்.

தற்போது நடராஜன் நேற்று மாலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதற்கிடையே அவரின் இழப்பிற்கு பல்வேறு கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரின் இறப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் அதிமுக தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது நலன் விரும்பிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திருவாரூர் குளக்கரையில் அமர்ந்து நினைவலைகளை புரட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details