முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி
புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி.
11:38 February 22
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி
புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி.
11:29 February 22
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது என்று சபாநாயகர் அறிவிப்பு. முதலமைச்சர், காங்கிரஸ் எம்.எம்.ஏக்கள் அவையில் இருந்து வெளியேறிய நிலையில் சபாநாயகர் இதனை அறிவித்தார்.
பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்தது - சபாநாயகர் அறிவிப்பு
11:19 February 22
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது என்று சபாநாயகர் அறிவிப்பு.
11:14 February 22
முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுக்கு அதிமுக உறுப்பினர் அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் தொடர்ந்து பேசி வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
11:11 February 22
நாட்டில் பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மை சமுதாயத்திற்கு பாதுகாப்பு இல்லை - நாராயணசாமி
11:03 February 22
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாமா, எதிர்ப்பை காட்டினால் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுகிறது மத்திய அரசு - பேரவையில் நாராயணசாமி பேச்சு
10:50 February 22
பெட்ரோல், டீசல், கேஸ் விலை கடுமையாக உயர்கிறது. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - நாராயணசாமி
10:45 February 22
புதுச்சேரி மாநிலம் மட்டும் வஞ்சிக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை வேண்டும்; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர் என முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்.
10:39 February 22
"கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற பணிகள், திட்டங்களை நிறைவேற்றினோம். புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம்"
10:38 February 22
சோனியாகாந்தி, ஸ்டாலின் ஆதரவால் முதலமைச்சரானேன். நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் மக்கள் எனக்கு அளித்தனர்.
கரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளம் கொடுத்த மாநிலம் என்ற பெருமையை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது. கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களுக்காக சேவை ஆற்றினர் - நாராயணசாமி பேச்சு.
10:35 February 22
புதுச்சேரியில் நடைபெறும் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், கிரண்பேடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார் - நாராயணசாமி பேச்சு.
10:25 February 22
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. புறக்கணிக்கப்பட்டவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெறுகிறது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு.