புதுச்சேரி: புதுச்சேரியில் நவம்பர் 15ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றிரவு (நவ.30) முடிவடைந்தது. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை புதுவை மாநில செயலாக்க குழு உறுப்பினர் செயலர் அசோக்குமார் பிறப்பித்துள்ளார். அதன்படி, தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
சமூக மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம். திருமண விழாவுக்கு அதிகபட்சம் 100 பேரும், இறுதிச் சடங்குக்கு அதிக பட்சம் 20 பேரும் பங்கேற்கலாம்.
கடற்கரை சாலை மற்றும் பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திரையரங்கங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீதத்துடன் நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம் என்து நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கேரள மாநிலத்திற்கு பொதுப் போக்குவரத்து அனுமதி- முதலமைச்சர் ஸ்டாலின்