புதுச்சேரி:தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் குழு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (ஜூலை 7) அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்படி புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு, சைக்கிள் ஓட்டி வந்து முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
நாராயணசாமியுடன், மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், இதர கட்சி நிர்வாகிகள் வந்து பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பெட்ரோல் நிலையத்தில், பொதுமக்களிடம் ஒன்றிய அரசுக்கு எதிராக, கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் கையொப்பமும் பெற்றனர்.