தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களை ஏமாற்றும் மயாஜால பட்ஜெட் - நாராயணசாமி - புதுச்சேரி செய்திகள்

மத்திய பட்ஜெட் கார்ப்பரேட்டுக்கானது என்றும், மக்களை ஏமாற்றும் மாயஜால பட்ஜெட் எனவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, Puducherry EX CM Narayanasamy
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Feb 2, 2022, 6:20 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி மின் துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திமுக, கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (பிப்ரவரி 1) நடைபெற்றது.

அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி, காங்கிரஸ் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சிவா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, மத்திய பட்ஜெட் குறித்து செய்தியாளரிடம் பேசிய நாராயணசாமி, "கரோனா காலத்தில் பொதுமக்களின் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் எந்த அம்சமும் இன்று தாக்கல்செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இல்லை.

இது கார்ப்பரேட்களுக்கான பட்ஜெட். இன்று தாக்கல்செய்யப்பட்ட ரூ. 38 லட்சம் கோடி பட்ஜெட்டில் 27 லட்சம் கோடிதான் வருமானம் உள்ளது. இது மக்களை ஏமாற்றும் மாயஜால பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் இன்னும் பொருளாதார நெருக்கடி நாட்டில் ஏற்படும்" என விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: Union Budget 2022: 'மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை' - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details