புதுச்சேரி:மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் திறந்த வேனில் பரப்புரையில் ஈடுபட்டனர். அவர்கள், சோலை நகர், முத்தியால்பேட்டை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர் செந்தில் குமாருக்கு கைச்சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து நாராயணசாமி பரப்புரை - Puducherry ex CM Narayanasamy
புதுச்சேரி காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று (மார்ச் 22) பரப்புரை மேற்கொண்டார்.
puducherry-ex-cm-narayanasamy-campaigns-in-support-of-the-congress-and-their-alliance-candidate
தொடர்ந்து, காலாபட்டு தொகுதி திமுக வேட்பாளர் முத்துவேலை ஆதரித்து காலாபட்டு தொகுதியில் வீதி வீதியாகச் சென்று, கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினர்.
இதையும் பாருங்க:வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரி மக்களின் ஆதரவு யாருக்கு?