புதுச்சேரி: மத்திய அரசு, நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும், அதன்படி புதுச்சேரியில் உள்ள மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மின் துறை ஊழியர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து பலகட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
ஆனால் அதற்கு எந்தவித பலனும் இல்லாததால் மின் துறையை தனியார்மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என முதலமைச்சர், துணைநிலை ஆளுநருக்கு மனு அளித்தனர்.
இதன் பின்னரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, இன்று (ஜனவரி 31) செய்தியாளரைச் சந்தித்த மின் துறை தனியார்மய எதிர்ப்புப் போராட்டக் குழு, நாளை (பிப்ரவரி 1) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.