தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்: கல்வித் துறை அமைச்சர் தொடங்கிவைப்பு

புதுச்சேரியில்  நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று (ஆக. 13) தொடங்கிவைத்தார்.

By

Published : Aug 14, 2021, 12:38 AM IST

Updated : Aug 14, 2021, 6:14 AM IST

நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்
நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

புதுச்சேரி:நடப்பு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள், இளநிலை கலை, அறிவியல், வணிகம், நுண்கலைகள் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் முறையை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று தொடங்கிவைத்தார்.

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.c enga puducherry.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இணைய மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

கல்வித்துறை அறிவிப்பு

பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், நீட் அல்லாத இளநிலை தொழில்முறை, கலை, அறிவியல், வணிகம் சார்ந்த படிப்புகளுக்கு மற்ற மாநில ஒதுக்கீட்டின் கீழ் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அவரவர்களின் தகுதியின் அடிப்படையில் இணையதளம் வழியாக நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி, பிற மாநில விண்ணப்பதாரர்கள் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சுயநிதி இடஒதுக்கீட்டுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அதாவது பி.எஸ்சி வேளாண்மை, பி.எஸ்சி செவிலியர், பி.ஃபார்ம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை'

Last Updated : Aug 14, 2021, 6:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details