தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்! - மின்துறை தனியார்மயமாக்கல்

புதுச்சேரியில் 6 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 4, 2022, 1:02 PM IST

புதுச்சேரி:மின்துறை தனியார்மயத்தை கண்டித்து மின்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று (அக்.4) அப்போராட்டத்தை ஊழியர்கள் வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளனர்.

போராட்டத்தை முதலில் கைவிட்டுவிட்டு மத்திய, மாநில அரசுகளுடன் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என முதலமைச்சர் கூறியதைத் தொடர்ந்தும் ஊழியர்கள், மின்துறை தனியார்மயமாக்கலை நிறுத்தினால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ரங்கசாமி, ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் முடிவு எடுக்கலாம் எனத்தெரிவித்தார். இதனை ஏற்று, மின் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதை முதலமைச்சர் ஏற்பதாக தெரிவித்த நிலையில், போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டதாக அறிக்கப்பட்டது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் கைது; கொந்தளித்த தமிழிசை - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details