புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! - புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
![புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10989739-thumbnail-3x2-pudadf.jpg)
11:33 March 13
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தலைமை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இதில் 30 தொகுதிகளில் திமுகவுக்கு 13 தொகுதிகளும், காங்கிரசுக்கு 15 தொகுதிகளும், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க.கவுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (மார்ச் 13) புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், பாகூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் பிறகு அறிவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...எழுத்தாளர் இமையத்திற்கு குவியும் பாராட்டுக்கள்; தலைவர்கள் வாழ்த்து