தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்கள் விடுதி கட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் - Puducherry Deputy Governor Tamilisai Soundarajan

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் 10 கோடி ரூபாய் மதிப்பில் பெண்கள் விடுதி கட்ட ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆளுநர் ஒப்புதல்
ஆளுநர் ஒப்புதல்

By

Published : Jul 29, 2021, 3:51 PM IST

புதுச்சேரி : துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”ஒன்றிய அரசு நிதியுதவியுடன், “பாபு ஜகஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா” திட்டத்தின் கீழ் மொத்தம் 10.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாகூர், காரையம்புத்தூர் வருவாய் கிராமங்களில் இரண்டு அட்டவணை இனப் பெண்கள் விடுதிகள் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதல்.

பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களது கைபேசி, மடிக்கனினி, கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி செட்டில்மென்ட் விவரப் பிரதிகள், எஃப்.எம்.பி நகல்கள், பட்டா நகல்களைப் பார்வையிட்டு நகல் எடுப்பதற்கு வசதியாக சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் “பொது தளத்தில்“ பதிவேற்றம் செய்யும் இ-சேவைக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Nilamagal.py.gov.in இணையதளம் வழியாக செட்டில்மென்ட் விவரப் பிரதிகள், பட்டா,எஃப்.எம்.பி நகல்கள் ஆகியவற்றின் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பிரதிகள் வழங்க பயன்பாட்டாளர் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details