தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்’ - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - protest against petrol and diesel price hike

புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து போராட்டம்
பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து போராட்டம்

By

Published : Jun 13, 2021, 5:01 PM IST

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. குறிப்பாக 11 மாநிலங்களில் 100 ரூபாயை எட்டியுள்ளது.

இந்நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக இன்று (ஜூன்.13) புதுச்சேரியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரக்குழு சார்பாக ஆம்பூர் சாலையில் உள்ள ஆசிரம பெட்ரோல் பங்க் முன்பு நகரக்குழு தலைவர் ரஞ்சித் தலைமையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு பெட்ரோல், டீசல் போட வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:நெடுவாசலைத் தொடர்ந்து புதுக்கோட்டை பகுதியில் எரிவாயு எடுப்பதை எதிர்த்து மீண்டும் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details