புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 பேருக்கும், காரைக்காலில் 20 பேருக்கும், மாஹேவில் 12 பேருக்கும்,ஏனாமில் ஒருவருக்கும் என மொத்தம் 100 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சிகிச்சைப் பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 1,795ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலத்தில் 962 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.