தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல்காந்தியை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் கைது

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தியை அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

ராகுல்காந்தி மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் கைது
ராகுல்காந்தி மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் கைது

By

Published : Jun 17, 2022, 2:18 PM IST

புதுச்சேரி: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியை அமலகாத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 3 தினங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட கட்சியினர் ஊர்வலமாக ஆளுநர் மாளிகை அருகே வந்தபோது, போலிசார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ராகுல்காந்தி மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் கைது

தடுப்புகளின் மீதும் ஏறி முற்றுகையிட முயன்றதால், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் போலிசாருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலிசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி முதலமைச்சரை தள்ளிய காவலரால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details