தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடிக்கு சேலை, வளையல், பூ, பொட்டு பார்சல்: எரிவாயு விலையைக் குறைக்க நூதனப்போராட்டம் - Puducherry Congress send saree to modi

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடிக்கு சேலை, வளையல், பூ, பொட்டு அனுப்பும் நூதன போராட்டம் நடைபெற்றது.

Puducherry Congress  send saree and bracelet to Modi
Puducherry Congress send saree and bracelet to Modi

By

Published : Jul 13, 2021, 9:46 AM IST

புதுச்சேரி:நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அண்மைக்காலமாகவே உயர்ந்து வருகின்றது. இதனைக் கண்டித்து தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடிக்கு சேலை, வளையல், பூ, பொட்டு , மஞ்சள், அனுப்பும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேம் பஞ்சகாந்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆம்பூர் சாலையில் இருந்து ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

அப்போது அவர்கள் கொண்டு சென்ற சேலை, வளையல், பூ, பொட்டு, மஞ்சள் ஆகியவற்றை பிரதமர் மோடிக்கு கொரியர் அனுப்பி வைத்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் இதனை அனுப்பிவைத்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details