புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது புதுச்சேரி பாஜக மகளிரணித் தலைவி ஜெயலட்சுமி தலைமையில் 30க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர், காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹீடோ பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.