- புதுவையில் உள்ள நான்கு சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஊதிய நாளன்று ஊதியம் வழங்க வேண்டும்
- நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள பணி உயர்வு, ஏழாவது ஊதிய வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி வழங்க வேண்டும்
- முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும்
- மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆறாவது - ஏழாவது ஊதிய குழுக்களின் பரிந்துரைகளின்படி கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்துதல்
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி உயர் கல்விக் குழுமத்தின்கீழ் இயங்கும் நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், காரைக்காலில் உள்ள கல்வியல் கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.