தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த ஆட்சியர்! - puducherry district news

கரோனா காரணமாக வாக்குசாவடிகள், வாக்கு எண்ணும் மையங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் வாக்கு எண்னும் மையங்களை மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச் 6) ஆய்வு செய்தார்.

puducherry-collector-inspected-the-polls
puducherry-collector-inspected-the-polls

By

Published : Mar 6, 2021, 4:54 PM IST

புதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்தில் சட்டபேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. கரோனா தொற்று காரணமாக ஏற்கனவே இருந்த 954 வாக்குச்சாவடிகள் தற்போது ஆயிரத்து 559 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இரண்டாக இருந்த வாக்கு எண்ணிக்கை மையம் மூன்றாக உயர்த்தப்பட்டுள்ளது.

லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு ஆண்கள் தொழில் நுட்பக்கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய மூன்று இடங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வாக்குசாவடிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பூர்வா கார்க் தலைமையில் தேர்தல் துறை அலுவலர்கள் மூன்று வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். வாக்கு எண்ணும் மையங்களாக தேர்வு செய்யப்பட்ட மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:’கண் இருந்தால் கண்ணீர் வரும்’ - கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details