வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்பதால் புதுச்சேரியில் அனைத்து துறைகளையும் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து புயல் வருவதை அலுவலர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும், அப்படி பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தால் முன்னெச்சரிக்கையாக தகவல் அளிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அவசர கால மையத்தை தொடர்புகொண்டால் உடனடியாக அந்த துறைக்கு தகவல் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அண்ணாசாலையில் மரம் ஒன்று சாலையில் விழுந்தது. அதனை நகராட்சி ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர். அப்போது அங்கு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, அப்பணியை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மரத்தை அகற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க:கடலுக்குச் சென்று கரை திரும்பாத 200க்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்ன?